Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான நிலைமை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்றிரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று (04) இரவு 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மறு அறிவித்தல் வரை கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் குறிப்பிடப்பட்ட கடற்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கூர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

உகாண்டாவில் பாடசாலை பஸ் விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பஸ் விபத்து – கைக்குழந்தை உட்பட 26 பேர் காயம்! ​

வைகாசி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எண்ணெய் விலைகள் மேலும் சரிவு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிறரின் பொதிகளை சுமக்க வேண்டாம் – சுங்கம் எச்சரிக்கை!

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube