Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

யாழ் கிங்ஸ் அணிக்கு புதிய உரிமையாளர்கள்!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாஹிர் கான் இணை உரிமையாளராக உள்ள ஸ்டாக்ஹோம் தலைமையகத்தை கொண்ட Anchor Sports AB நிறுவனம், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் யாழ்ப்பாண கிங்ஸ் அணியை கையகப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அணி Anchor Jaffna Kings என்ற புதிய பெயரில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

முன்னதாக, போட்டி முறைகேடு குற்றச்சாட்டில் முன்னாள் இணை உரிமையாளர் மஞ்சோத் கல்ரா கைது செய்யப்பட்டதையடுத்து, அணி இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் LPL உரிமை நிறுவனமான IPG ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது.

Anchor Sports AB நிறுவனத்தின் இணை உரிமையாளர்களாக சாஹிர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌத்தம் உள்ளனர். இந்நிறுவனம் பெல்ஜியத்தின் European T20 Premier League மற்றும் கனடாவின் Super60 League அணிகளிலும் முதலீடு செய்துள்ளது.

LPL வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியான யாழ்ப்பாண கிங்ஸ், ஐந்து தொடர்களில் நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அணியின் புதிய உரிமையாளராக இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த சாஹிர் கான், இலங்கை கிரிக்கெட்டின் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

LPL போட்டித் தொடரின் பணிப்பாளர் சமந்த டொடன்வெலவும், சாஹிர் கானின் வருகை இலங்கை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலாக அமையும் என தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு 190 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர் – கந்தசாமி பிரபு

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் -சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொலைக் குற்றம் மற்றும் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்கு!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹோட்டலுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்!

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube