இலங்கை தேசிய கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் தாக்கல் செய்த வரி தொடர்பான எழுத்தாணை மனுக்கள் நேற்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டன.
விளையாட்டு வீரர்களை சுயாதீன சேவை வழங்குநர்களாகக் கருதி APIT வரி விதிக்கக் கூடாது என மனுதாரர்கள் வாதிட்டனர். எனினும், வீரர்கள் ஊழியர்களாக கருதப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்தது. இரு தரப்பு விளக்கங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், மேலதிக ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கியதுடன், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
