ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் வெஞ்சர் பகுதியில் பெளசர் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்று (25) மாலை 05.30மணியளவில் இடம் பெற்றது .
பொகவந்தலாவ பகுதியில் இருந்து நோர்வூட் பகுதிக்கு பால் ஏற்றி சென்ற பெளசர் வண்டியும், நோர்வூட் பகுதியில் இருந்து வெஞ்சர் பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியின் அதிகம் வேகமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்தின் போது முச்சக்கர வண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
