இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று மென்பொருள் கோளாறு காரணமாக தற்காலிகமாக முடக்கப்பட்டமை தொடர்பில் மெட்டா நிறுவனம் இந்திய அரசிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.
மெட்டாவின் பிரதான உலகளாவிய விவகார அதிகாரி ஜோயல் கப்லான், இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து இந்த மன்னிப்பை தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்த வீடியோவே தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்திய அரசு மெட்டா அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி உள்ளடக்க வடிகட்டி கோளாறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக மெட்டா தெரிவித்துள்ளது.
பின்னர் குறித்த தொழில்நுட்ப பிரச்சினை சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
