ரத்மலானை, ஞானேந்திர வீதியில் அமைந்த வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி இருமாடி வீடொன்றின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதில், ஒன்று வெடித்துச் சிதறியதுடன், மற்றையது வீட்டுத் தோட்டத்தில் விழுந்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மொறட்டுவை மற்றும் ரத்மலானை பகுதிகளில் வைத்தே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொறட்டுவை மற்றும் ரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் வழிகாட்டலின் பேரிலேயே இக்குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான மோதலே இத்தாக்குதலுக்குக் காரணம் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
