சபரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையும், மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
