தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாண பாடசாலையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 12 வயது மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
14 வயதுடைய மாணவன் நடத்தியதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், பாடசாலைக்கு வருவதற்கு முன்பு தனது தாத்தா மற்றும் பாட்டியையும் அவர் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பாடசாலையில் மேலும் 5 பேரை சுட்டுக் கொன்றதுடன், சந்தேகநபர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த 12 வயது மாணவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தாய்லாந்து முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
