அமெரிக்க காங்கிரஸ், ஈரானுடனான போர்த் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையிலான போர் அதிகாரத் தீர்மானமொன்றை முதன்முறையாக நிறைவேற்றியுள்ளது.
குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபை, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அல்லது போரை முன்னெடுப்பதற்கு முன்பு காங்கிரஸின் அனுமதியைப் பெற வேண்டும் என டிரம்புக்கு அறிவுறுத்தும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்ததன் மூலம், குறித்த யோசனை 50க்கு 48 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஈரான் தொடர்பான போர் நிலைமை மற்றும் கடந்த ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்தும் இதன்போது கவலை வெளியிடப்பட்டது.
இந்த தீர்மானம், டொனால்ட் டிரம்பின் போர் தொடர்பான அதிகாரங்கள் மீது ஒரு வகையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
