Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 அரச பங்களாக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமைச்சர்கள் உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைய, கொழும்பில் அமைந்துள்ள 7 அரசுக்குச் சொந்தமான பங்களாக்களை பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பங்களாக்களை பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யோசனைகளைக் கோரியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 24 அரச பங்களாக்களை பொது–தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 7 பங்களாக்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பங்களாக்களும் இதில் அடங்குகின்றன.

குறித்த பங்களாக்கள் உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கான யோசனைகளை சமர்ப்பிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

104 நவீன மெட்ரோ பேருந்துகள் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தன!

ஆடி 29, 2026
இலங்கைஉலகம்

கொழும்பு–ஹோ சி மின் நேரடி விமான சேவை ஆரம்பிக்கிறது: வியட்நாம் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 வரவு-செலவுத் திட்ட அமுலாக்கம் குறித்து மீளாய்வு

ஆனி 18, 2026
இலங்கைஉலகம்

IMF அதிகாரிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube