Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்தில் குடியேறும் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது

#கொழும்பு #துறைமுகநகரம் #ColomboPortCity #உள்ளூராட்சிதேர்தல் #வாக்களிப்பு #தேர்தல் #இலங்கை #SriLanka #LocalGovernmentElection #ElectionNews

ஆவணி 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) எதிர்காலத்தில் குடியேறுவதற்கு திட்டமிடும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதால், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் எச்சரித்துள்ளார்.

துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும்.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்” என்று தெரிவித்த அவர், துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போது அங்கு நிரந்தர வாக்காளர்களாக மக்கள் யாரும் வசிக்கத் தொடங்காத நிலையிலும், எதிர்காலத்தில் இங்கு குடியமரப்போகும் மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவம் குறித்தே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

“கிரிக்கெட் பேட்டிங் விளையாட்டு” – விளையாட்டுத்துறை அமைச்சர்!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் “நினைவாயுதம்” புகைப்பட கண்காட்சி!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

திருகோணமலையில் வறட்சியால் குடியிருப்புகளுக்கு வரும் காட்டு யானைகள்!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube