Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலை தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பு

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கேகாலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலாவதியான இரசாயனம் மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தியமை மற்றும் அதிக கட்டணம் வசூலித்த குற்றத்துக்காக, அந்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் கேகாலை மாவட்ட விசாரணை அதிகாரிகளால் கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில், குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த ஜூலை 24ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் குறித்த வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே, இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.

இதன்போது எப்.பி.சி எனும் இரத்தப் பரிசோதனைக்காக நுகர்வோர் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட 400 ரூபா கட்டுப்பாட்டு விலையை மீறி, நோயாளி ஒருவரிடமிருந்து 500 ரூபா அறவிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும், வைத்தியசாலைஆய்வகத்தினுள் காலாவதியான எச்.சி.வி. பரிசோதனை அட்டைகள் தொகுதிகளும், கிளினிக்கல் சிஸ்டம் பகுப்பாய்வுகள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்காக காலாவதியான இரசாயன திரவங்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் வைத்தியசாலையின் மருந்தகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களுடன் காலாவதியான ஊசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இவ்வழக்கு கடந்த 6ஆம் திகதி கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான வைத்தியசாலை நிர்வாகம் தம்மீதான 3 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டது. இதனையடுத்தே நீதிவானால் 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள் அல்லது மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தும் , கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக கட்டணம் அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது ஆய்வகங்கள் தொடர்பில் தகவல்கள் இருப்பின், 1977 எனும் குறுகிய இலக்கத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரண வாக்குமூலம்: முறையான விசாரணை கோருகிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வெப்பநிலை உயர்வாக காணப்படும்!

ஆடி 22, 2026
முக்கியச் செய்திகள்

சிகரெட்டில் இருந்து வேப்பிங் மாற்றம் – கண் நோய்கள் அதிகரிக்கும் ஆபத்து ஆய்வில் எச்சரிக்கை

ஆனி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புதுக்குடியிருப்பில் 33 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மதுபானம் பறிமுதல்!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube