Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வெப்பநிலை உயர்வாக காணப்படும்!

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் “வெப்பச் சுட்டெண்” காரணமாக மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.Geographic Reference

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கல்பிட்டி தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

சட்டசபை செயலாளரை சந்தித்து தகுதி நீக்கம் கோரிக்கை வைத்த இ.பி.எஸ்

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

ஆடி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

உலகக் கிண்ணப் பரிசளிப்பு விழா – ட்ரம்ப் பங்கேற்பு

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube