கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவிலிருந்து சுமார் 400 கி.மீ (250 மைல்கள்) மேற்கே, சோகோ பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகராட்சிக்கு அருகே திங்கட்கிழமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெரேரா நகரம் அமைந்துள்ள ரிசரால்டா மாகாணத்தில் குறைந்தது 40 பேரும், கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான வல்லே டெல் கௌகா மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்திருப்பதாக கொலம்பியாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

