கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ஹஷீஷ் மற்றும் குஷ் வகை போதைப்பொருள்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் 27, 30 மற்றும் 34 வயதுடைய ஹெட்டிமுல்ல மற்றும் தங்ஒவிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 3 கிலோ 8 கிராம் ஹஷீஷ் மற்றும் 1 கிலோ 826 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
மற்றொரு சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 968 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும், மேலும் ஒருவரிடமிருந்து 2 கிலோ 310 கிராம் ஹஷீஷ் மற்றும் 1 கிலோ 952 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
