Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரம்!

ஆனி 13, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

கொழும்பு மாவட்டத்தில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை’ முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீர்மானித்துள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (12) கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அறிக்கைகளின்படி, தற்போது நாடு முழுவதும் பதிவாகியுள்ள சுமார் 39,100 டெங்கு நோயாளர்களில் 25.8% விகிதத்தினர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு மாவட்டம் ‘அதி-அபாய’ மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது .

அண்மையில் நிலவிய கடும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இம்முறை டெங்கு பரவல், வீடுகளை விட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களிலேயே அதிகமாகக் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் நுளம்புகள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 15 முதல் 21 வாரத்தில் அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வீடுகளைச் சூழவுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கான சிரமதானங்களை ஏற்பாடு செய்தல். பிரதேச செயலகங்கள் ஊடாக அதி-அபாய வலயத்திலுள்ள வீடுகளைப் பரிசோதனை செய்தல் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், பதாதைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் ஊடகங்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் 10 ஆம் தரத்திற்குக் கீழ் உள்ள மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றும், மாணவர் எவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பாடசாலை அதிகாரிகளிடம் சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மாவட்ட அரசியல் தலைமைத்துவம், சர்வமதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு

வைகாசி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு அதிகரிப்பு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube