விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் (AASL) முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நியமனம் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு மார்ஷல் பதவி விமான நிலையங்களில் தேசிய மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வரலாற்று ரீதியாக ஆண்கள் அதிகம் வகித்து வந்த இந்தப் பதவியில் வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளமை, விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளில் முன்னேற விரும்பும் இளம் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது.
இந்த நியமனம் இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.