ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படை (IRGC) தொடர்புடைய பல்வேறு இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா புதிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
தாக்குதலில் இராணுவ கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிலையங்கள், கடற்படை திறன்கள் தொடர்பான இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் திடீர் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானால் ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதுடன், அமெரிக்கப் படையினருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் CENTCOM குறிப்பிட்டுள்ளது.
