Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பர் 8 முதல் 11 வரை பாராளுமன்றம் கூடவுள்ளது

#பாராளுமன்றம் #இலங்கைபாராளுமன்றம் #செப்டம்பர்8 #செப்டம்பர்11 #பாராளுமன்றஅமர்வு #அரசியல் #இலங்கைஅரசியல் #அரசாங்கம் #நாடாளுமன்றம் #SriLankaParliament #Parliament #SriLankaPolitics #PoliticalNews #SriLankaNews

ஆவணி 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

பாராளுமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றச் செயலகம் அறிவித்துள்ளது.

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (20) நடைபெற்ற பாராளுமன்றப் அலுவல் குழுக் கூட்டத்தில் குறித்த வாரத்திற்கான பாராளுமன்றப் அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்றப் அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலம் வாய்மூல விடை எதிர்பார்க்கும் வினாக்களுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை (203 ஆம் அதிகாரத்தின் கீழ்) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இலக்க 2489/22 மற்றும் 2493/19 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகளையும் அங்கீகரிப்பதற்கான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 வரையிலான காலம் பிரதமரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையிலான காலம் வாய்மூல விடை எதிர்பார்க்கும் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னர் மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாதுகாப்பு பதவி நிலை பிரதானி (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளை வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறிய குழந்தைகள் கைபேசி பயன்படுத்தினால் கண் பார்வை, பேச்சுத் திறன் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சாலேவின் குடும்பத்தினரை பின் தொடரும் மர்மநபர்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயரதரா பரீட்சைக்கு மகளை அழைத்து சென்ற தந்தை மீது தாக்குதல் – சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழப்பு

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணில் சஜித் இரகசிய சந்திப்பு!

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube