தலைமன்னார் உருமலை முனைப் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் இந்திய மீன்பிடிப் படகொன்றை இலங்கை கடற்படை நேற்று (12) கைப்பற்றியதுடன், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளது.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அடித்தள இழுவைமீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
