Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வெளியேற்றிய 4 தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கு விளக்கமறியல்

ஆவணி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையில் எந்தவிதமான இறக்குமதிப் பொருட்களும் இன்றி சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு முன்னணி தனியார் வணிக வங்கிகளின் முகாமையாளர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த பிரபல பணப் பரிமாற்ற நிலையம் ஒன்று, எவ்வித இறக்குமதிப் பொருட்களோ அல்லது முறையான ஆவணங்களோ இன்றி, பல வங்கிக் கணக்குகள் வழியே இந்த பாரிய நிதியை வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளது.

இச்சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்வதற்காக, கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர்களுக்கு குறித்த மோசடி நபரால் வாரம் தோறும் இலஞ்சப் பணம் வழங்கி வரப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் நிலைக்கு ஏற்ப வாரத்திற்கு 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 1 இலட்சம் ரூபாய் வரை இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட ஒரு வங்கி முகாமையாளருக்கு ஒரே சந்தர்ப்பத்தில் 10 இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீவிர விசாரணைக்குப் பின்னர், இந்த 4 அதிகாரிகளையும் அவர்கள் பணிபுரிந்த வங்கி வளாகங்களுக்குள்ளேயே வைத்து கைது செய்தனர்.

இலங்கை வரலாற்றில் வங்கி அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்டு இடம்பெற்ற மிகப்பாரிய நிதியியல் மோசடி நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில், இலங்கையில் இவ்வாறான தொகையிலான குற்றத்திற்காக வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விரிவான விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

38.1% கர்ப்பிணிகள் மருத்துவ அபாயங்களை கொண்டிருக்கின்றனர்!

வைகாசி 28, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநிலங்களவை உறுப்பினர் யார்?

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 17,000 புதிய வீடுகள்!

ஆனி 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

யாழில்வேலையற்ற பட்டதாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube