Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

ஆவணி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

டுபாய் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படும் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் டுபாயில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஷிரான் பாசிக், அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.

இந்நிலையில் விமானநிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, சந்தேகநபரிடம் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, டுபாயில் வர்த்தக வளாகமொன்றில் இருந்தபோது அந்நாட்டுப் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அமெரிக்கா – ஈரானுக்கிடையில் ஏற்பட்ட போர்ச் சூழலின் போது டுபாய் மீது தாக்குதல் நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் விமானங்கள், ஏவுகணைகள் தொடர்பான புகைப்படங்களையும் காணொளிகளையும் அவரது தொலைபேசியில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

மேலும், இலங்கைக்கு நாடுகடத்தப்படும் வரை டுபாய் பொலிஸார் ஈரானுடனான தொடர்புகள் குறித்து தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.

இந்நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை முன்னதாக நீக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் பெரேராவின் மேற்பார்வையின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கமல் அபேவங்ஸவின் முறைப்பாட்டுக்கமைய இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீர் தங்க விலை ஏற்றம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? – சட்ட நிபுணர்கள் விளக்கம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழ் மக்களின் நகைகள் எங்கே? – எஸ்.சிறிதரன்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தளதா மாளிகையில் வழிபாடு

ஆவணி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube