Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் சிலப்பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை நிலவக்கூடும்

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் சிலப்பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

நீர்கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியத்தில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இக் கடல் பிராந்தியத்தை அண்மித்த கரைப் பிரதேசத்திற்குள் கடல் நீர் உட்புகக்கூடும். ஆகையினால் இப் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அத்துடன் கரைப் பிரதேசத்தை அண்மித்துள்ள பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: இருவர் கைது

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு திரும்ப விரும்பும் அகதிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்த சாணக்கியன்

ஆவணி 20, 2026
இலங்கை

18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு இன்று முதல் அமுல்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலியில் நாளை 14 மணித்தியால நீர்வெட்டு!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube