Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்தேகமயில் கைவிடப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக பரவும் போலியான தகவல்

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி, வத்தேகம பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சிறுமியின் புகைப்படங்களுடன் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வந்தன. எனினும், வத்தேகம பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சிறுமி உயிருடன் இருப்பதுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியின் நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையும் சிறுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, வத்தேகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவுகள் உண்மையற்றவை எனவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமிக்கு பல நாட்கள் நடந்த கொடூரம்

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் அழுத்த மின் பாதைகள், துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விட வேண்டாம்

புரட்டாதி 4, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரங்கள் அறிவிப்பு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube