நுவரெலியா – லவர்ஸ்லீப் தோட்டத்தில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணியில் வீடு அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தோட்டத்தொழிலாளர்களை தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக தமது உழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எதிராக தோட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால், குறித்த பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் எனவும் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
