Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 மாதங்களில் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

#சமூகஊடகம் #சமூகஅலைதளங்கள் #கணக்குமுடக்கம் #மத்தியஅரசு #டிஜிட்டல்பாதுகாப்பு #சைபர்குற்றம் #இணையபாதுகாப்பு #செய்திகள்

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 1,275 முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 68 நொடிக்கு ஒரு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகபட்சமாக இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு சுமார் ஒரு இலட்சம் முடக்க உத்தரவுகளும், முகநூல் கணக்குகளுக்கு 80 ஆயிரம் உத்தரவுகளும், யூரியூப் கணக்குகளுக்கு 15 ஆயிரம் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கணக்குகள் முடக்கப்படும்போது, அவற்றில் பதிவிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இணையதள முடக்கத்திற்கான உத்தரவுகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000இன் பிரிவு 79(3)(b)-ன் கீழ் பிறப்பிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவின் கீழ், அரசு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் சட்டவிரோதமானவை எனக் கருதப்படும் உள்ளடக்கங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

போலி PHI அதிகாரிகள் குறித்து எச்சரிக்கை!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரண தண்டனை குறித்து இறுதி தீர்மானமில்லை!

ஆவணி 12, 2026

வெருகல் கானக்குயில் வர்ஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube