Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – நால்வர் கைது

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கல்கிசை – ஹுலுதாகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடந்த 15 ஆம் திகதி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்று (18) மாலை வத்தளை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவே கொம்பனித்தெரு பகுதியில் வைத்து, இந்தக் குற்றச் செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இரு ஆண்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, 12 தோட்டாக்கள் மற்றும் 6 வெற்றுத் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆண்கள் 28, 32 மற்றும் 35 வயதுடைய கொழும்பு 12, கொழும்பு 14 மற்றும் தளுபொத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபரான பெண் குருண பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம்

புரட்டாதி 4, 2026
இலங்கை

வங்கி மோசடி; முகாமையாளர் கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் நீர்விநியோகம் 12 மணி நேரம் நிறுத்தம்

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து பந்தயத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்!

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube