ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
