பழைய போகம்பறை சிறைச்சாலைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கைதிகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் காணப்பட்ட பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு கைதிகளை தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய போகம்பறை சிறைச்சாலைக்கு கைதிகளை மாற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், சிறைச்சாலைகளில் நிலவும் இடப் பற்றாக்குறையை ஓரளவு குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பான தேவையான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே, அவர்களை குறித்த சிறைச்சாலை வளாகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
