Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரண தண்டனை, ஆயுள் தண்டனை குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது – நீதியமைச்சர்

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முறையான வழிமுறைகளை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெகுவிரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெலிகட மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை ஆயுள் தண்டனையாக குறைக்கவும்,ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கலுக்காக முறையான வழிமுறைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டது.

ஓய்வுப்பெற்ற நீதியரசர் எஸ்.துரைசாரா தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழு கடந்த 10 மாத காலமாக மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான திட்டமிடலுக்கு அமைவாகவே தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கலின் போது முறையான வழிமுறைகளை தயாரித்தல்,மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளின் தண்டனை காலத்தை ஆயுள் தண்டனையாக குறைத்தல், ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டு காலம் வரை குறைத்தல்,கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்கல். ஆகியன குழுவின் பிரதான பரிந்துரைகளாகும்.

அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வழங்கல் தாமதிக்கப்பட்டுள்ளதால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பகுப்பாய்வு அறிக்கையை விரைவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சஹஸ்புர ஹல்கஹவத்த கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆனி 28, 2026
இந்தியாஉலகம்சினிமாமுக்கியச் செய்திகள்

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித கொலை – பிள்ளையான் உட்பட மூவர் விளக்கமறியலில்

ஆனி 15, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் 4வது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube