Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டு மக்கள் அனைவரையும் சந்திக்கவுள்ள ஜனாதிபதி

ஆகஸ்ட் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு மக்கள் பேரணித் தொடரொன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், கிராம மட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தேர்தல் குழுக்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்ட ரீதியில் தொடர் மக்கள் பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆணை திரண்டுள்ளதாகக் கூறும் எதிர்க்கட்சிகள், அறிக்கைகளை விடுப்பதோடு நிறுத்திவிடாமல் அதனை வீதியில் இறங்கி நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக அவ்வாறானதொரு மக்கள் கருத்து நிலவுமானால், அதைச் செயலில் காட்டுவதே அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை அவர்கள் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

ஜூன் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரியில் சிவப்பு மண்சரிவு அபாயம்!

அக்டோபர் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண விசேட காணிக்குழு தீர்மானத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

ஜூன் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் முதலிட ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்

செப்டம்பர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube