எதிர்வரும் 28ஆம் திகதி (28.08.2026) பகுதி நேர சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்த வானியல் நிகழ்வு மிகவும் ஆழமான பகுதி சந்திர கிரகணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சந்திர கிரகணம் இலங்கை மக்களுக்கு தென்படாது. கிரகணத்தின் போது சந்திரன் இலங்கைப் பகுதியில் அடிவானத்திற்கு கீழே இருப்பதே இதற்குக் காரணமாகும்.
கிரகணம் 28ஆம் திகதி அதிகாலை தொடங்கி, பின்னர் பகுதி நேர கிரகணமாக மாறி, காலை நேரத்தில் நிறைவடையவுள்ளது. இந்த நிகழ்வை வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் காண முடியும்.
தகவல்: இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
