ஈரானுடன் தற்போது எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபடவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அல் ஜசீரா ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “டொனால்ட் ட்ரம்ப் கூறியது போல, ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையோ அல்லது கலந்துரையாடலோ தற்போது நடைபெறவில்லை, அதற்கான திட்டங்களும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை மிகவும் உறுதியாகவும் திறமையாகவும் தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டாகத் தெரிவித்துள்ளார்.
