Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறிய குழந்தைகள் கைபேசி பயன்படுத்தினால் கண் பார்வை, பேச்சுத் திறன் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!

ஆவணி 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்

சிறிய குழந்தைகளுக்கு கைபேசிகளை வழங்குவது அவர்களின் கண் பார்வை மற்றும் பேச்சுத் திறனைப் கடுமையாகப் பாதிக்கும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

சிறிய குழந்தைகளுக்கு கைபேசிகளை வழங்குவதால் அவர்களின் கண் நரம்புகள் பலவீனமடைந்து பார்வைத் திறன் குறைவடைகிறது.

அத்துடன், குழந்தைகளின் பேச்சு வளர்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்படுவதால், அவர்களை கைபேசிகளிலிருந்து விலக்கி வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பாடசாலை விடுமுறை காலத்தை சிறுவர்கள் எவ்வாறு ஆரோக்கியமான முறையில் கழிக்க வேண்டும் என்பது குறித்தும், நிலவும் வெப்பமான காலநிலையில் தற்காப்பு வழிமுறைகள் தொடர்பிலும் அவர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக வியர்வை மூலம் உடலில் உள்ள நீரும் உப்பும் வெளியேறி சிறுவர்கள்நீர்ச்சத்துக் குறைபாடு (Dehydration) நிலைக்கு ஆளாகலாம்.

தலைவலி, வாந்தி, உடல் வலி, சோர்வு, தூக்கமின்மை மற்றும் அடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இந்தக் காலப்பகுதியில் சிறுவர்களுக்கு போதிய அளவு சுத்தமான நீரைக் குடிக்கக் கொடுப்பதுடன், செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து இளநீர், எலுமிச்சை, தோடம்பழம், நார்த்தங்காய் சாறு, மாதுளை சாறு மற்றும் கஞ்சி போன்ற இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயிலில் நீண்ட நேரம் விளையாடுவதால் வெப்பக் தாக்கம் (Heat Stroke) ஏற்பட்டு மூளை மற்றும் இதயம் பாதிக்கப்படலாம். இது தீவிரமடைந்தால் மயக்கம், வலிப்பு அல்லது உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேநேரம், தற்போது விடுமுறை நாட்களில் பட்டம் விடும்போது காலணி அணியாமல் வயல்வெளிகளுக்குச் செல்வதால் ‘எலிக் காய்ச்சல்’ போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமுள்ளதால், பாதுகாப்புடன் செருப்பு அணிந்து செல்ல வேண்டும்.

விடுமுறை காலங்களில் சிறுவர்கள் வீட்டிலிருக்கும்போது, பெரியோர்களின் மாத்திரைகள், மின்சாதனங்கள் மற்றும் கூர்மையான பொருட்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் சிறுவர்களை தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். சரியான விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவதன் மூலம் சிறுவர்களை பல்வேறு நோய்களிலிருந்தும் விபத்துகளிலிருந்து பாதுகாக்க முடியும் என விசேட மருத்துவர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

7 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபரை 27 முறை கடியால் குத்தி கொலை செய்த மாணவர்கள்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலை குளிரூட்டி கட்டமைப்பில் கோளாறு!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube