Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்மேவின் தொலைபேசியில் சிக்கிய ஆதாரங்கள் : நடிகைகள், அரசியல் வாதிகள் சிக்குவார்களா?

ஆவணி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ‘கெஹல்பத்தர பத்மேவிடம்” இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளிலிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

07 நடிகைகள் மற்றும் 09 அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 08 கைப்பேசிகளிலிருந்தும் நீக்கப்பட்ட தரவுகள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 8,841 தொலைபேசி அழைப்பு விபரங்கள், 3,26,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிக்குறிப்புக்கள் மற்றும் 5,039 காணொளிகள் என்பன அவற்றில் அடங்கியுள்ளன.

சந்தேக நபரின் தொலைபேசிகளில் 09 அரசியல்வாதிகள் மற்றும் 07 நடிகைகள், தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், பெயரிடப்பட்ட நபர்கள் எவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதன் மூலம் அர்த்தப்படுத்த முடியாது என குற்றபுலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்த தகவல்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் கண்டு பிடிக்கப்பட்டு, அது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 19 பேரின் கடவுச்சீட்டுப் புகைப்படங்கள் மற்றும் 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேறிய கெஹல்பத்தர பத்மே, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சுமார் 15 முறை பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்

இந்தநிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 3ஆம் திகதி வரை அவரை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது!

ஆடி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் ஆயுத கிடங்கு மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்

ஆவணி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

32 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நாமல் கடும் கண்டனம்!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube