Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

94000 கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 94000 கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 72 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடுதழுவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 94 ஆயிரத்து 292 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள போதும், நாளொன்றில் 200 க்கும் அதிகளவான நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் கடந்த மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஜூலை மாதம் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, ஜூன் மாதம் 21,533 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இம்மாதத்தில் கடந்த 25 நாட்களில் 8,551 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மேல் மாகாணத்தில் 52.962 சதவீதமானோரும் (49,901), தென் மாகாணத்தில் 20,779 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

தொடர்ந்து கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தறை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் உட்பட கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதைக் காணக் கூடியதாக உள்ளது.

நோயாளர் அதிகரிப்போடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 72 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 76 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நுளம்பு பரவலைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார அமைச்சின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் முப்படையினரும் இணைந்து நுளம்பு குடம்பி சோதனை உள்ளிட்ட நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆகையால் பொதுமக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமது சமூகப்பொறுப்பை உணர்ந்து சுற்றுப்புற சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதும் விசேட சோதனை 480 பேர் கைது!

ஆவணி 2, 2026
இலங்கை

”பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம்”-ஹர்ஷன நாணயக்கார

ஆனி 9, 2026
இலங்கை

இ-பாஸ்போர்ட் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய அமைச்சரவை உத்தரவு!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube