ஃபிஃபா (FIFA) தலைவர் கியானி இன்பான்டினோவுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு தாக்கல் செய்ய ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, புளோரிடாவில் உள்ள ஃபிஃபா நிறுவனங்களிடமிருந்து சாட்சியங்களையும் ஆவணங்களையும் பெற அமெரிக்க பிராந்திய நீதிமன்றத்தின் அனுமதியை, ஐரோப்பிய கால்பந்தாட்ட ஒன்றியம் கோரியுள்ளது.
முன்னதாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உலகக் கிண்ண மற்றும் கழக உலகக் கிண்ணம் தொடர்பான வணிக உரிமைகளை “ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்” (FFE) என்ற புதிய துணை நிறுவனத்திற்கு மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் கடும் எதிர்ப்பினால், அது கைவிடப்பட்டது.
இந்தநிலையில் குறித்த திட்டம் எவ்வாறு திட்டமிடப்பட்டது, வடிவமைக்கப்பட்டது மற்றும் அங்கீகரிக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களையும் சாட்சிகளையும் புளோரிடாவை தளமாகக் கொண்ட நீதிமன்றிடம் இருந்து எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
