கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் புத்தர் சிலைக்கு அருகிலுள்ள பகுதியில் தங்கியுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர், சூனிய பொம்மை வழிபாட்டில் ஈடுப ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடைபவனியாகச் சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தத் திரண்டிருந்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர், அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னரும் விகாரமஹாதேவி பூங்காவின் ஒரு பகுதியில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை அரச தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், இந்தக் குழுவினர் இத்தகைய வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குழுவினரின் போராட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் பக்கச்சார்பற்ற நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
