Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிட மறுத்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்திய நிறுவனம்

ஆவணி 29, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான Belonging: A Journey of Love நூலை இந்தியாவில் வெளியிடவில்லை என பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, தனது வாழ்க்கை அனுபவங்களை 544 பக்கங்களைக் கொண்ட சுயசரிதை நூலாக எழுதியுள்ளார்.

Belonging : A Journey of Love எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நூலை, பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் Alfred A. Knopf பதிப்பகம் சர்வதேச அளவில் வெளியிடத் திட்டமிட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நூல் வெளியிடப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சோனியா காந்தியின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிடும் பணியில் இருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா விலகியதாகத் தகவல்கள் வெளியாகின.

கையெழுத்துப் பிரதியில் சில மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை மேற்கொள்ள பதிப்பகம் பரிந்துரைத்ததாகவும், அவற்றை சோனியா காந்தி ஏற்க மறுத்ததன் காரணமாகவே வெளியீட்டு நிறுவனம் விலகியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம், சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிட தாங்கள் ஆர்வம் கொண்டிருந்தது உண்மை என்றும், ஆனால் அந்த நூலை இந்தியாவில் தாங்கள் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆசிரியர் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை ஏற்க மறுத்ததால் நூலை வெளியிட வேண்டாம் என நிறுவனம் முடிவு செய்ததாக வெளியாகியுள்ள தகவல் உண்மையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒரு பதிப்பாளராக நூலில் இடம்பெறும் தகவல்களைச் சரிபார்ப்பதும், நூலின் தரம் மற்றும் நலனைக் கருத்தில்கொண்டு ஆசிரியருக்கு பரிந்துரைகளை வழங்குவதும் தங்களின் உரிமையும் பொறுப்பும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பதிப்பகப் பணியின் இயல்பான ஒரு பகுதி என்றும், இதற்கும் சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிடாததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும், சோனியா காந்தியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

இதற்கிடையில், சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிட பல்வேறு இந்திய பதிப்பகங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், ஹார்பர் காலின்ஸ் நிறுவனத்துடன் நூல் வெளியீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனியா காந்தி, ராஜீவ் காந்தியுடனான காதல் மற்றும் திருமண வாழ்க்கை தொடங்கி, தனது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் வரையிலான பல்வேறு விவரங்களை இந்த சுயசரிதையில் விரிவாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், Belonging: A Journey of Love நூல் மீது அரசியல் வட்டாரங்களிலும் வாசகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

ஆனி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வியட்நாம் புகுவக் தீவில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூதூரில் மனிதபாவனைக்கு பொருந்தாத மரக்கறிகள் அழிப்பு!

ஆடி 14, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

உடப்புவாவில் கண்டெடுக்கப்பட்ட உடல் – அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரிக்கை

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube