இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட “இலங்கை-அவுஸ்திரேலிய வர்த்தக மாநாடு” (Sri Lanka–Australia Business Summit) தொடர்பாக அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Cassandra Fernando) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இது குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளதுடன், இலங்கை தொழில்முனைவோரின் பங்களிப்பையும் இரு நாடுகளுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டு வரும் வலுவான உறவுகளையும் பாராட்டியுள்ளார்.
