கொட்டகலை பிரதேச சபையின் வட்டார உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும்.
“வீதிதோறும் மின்விளக்கு” திட்டத்தின் முதல் கட்டமாக, சக்திபுரம் பகுதியில் மின்விளக்குகள் நேற்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வு கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான கௌரவ லெட்சுமண் விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் பிரதேச சபை தலைவர் கௌ, ராஜமனி பிரசாந் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
நிகழ்வில் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் உப தலைவர் திரு. பூலிங்கம் மற்றும் செயலாளர் திரு. மதியழகன் உள்ளிட்டோருடன் சக்திபுரம், அய்யாசாமி காடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இரவு நேரங்களில் பொது மக்களின் வீதி பயன்பாட்டையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “வீதிதோறும் மின்விளக்கு” திட்டம், கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்களின் தேவைகளை முன்னிறுத்திய அபிவிருத்திப் பணிகள் தொடரும்.
