Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம்

#சர்வதேசநாணயநிதியம் #IMF #IMFMission #இலங்கை #இலங்கைபொருளாதாரம் #நிதிநிலை #பொருளாதாரசெய்திகள் #SriLankaNews #EconomicNews #IMFSriLanka #NewsUpdate #TamilNews

புரட்டாதி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.

அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை எதிர்வரும் விஜயத்தின்போது தூதுக்குழுவினர் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யப்படும் அதேவேளை, நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் 9 நாட்களுக்கு பின்னர் 2 தொழிலாளர்கள் மீட்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் கடன்சுமை அதிகரித்துள்ளதாக போலிசெய்திகள் பரப்பப்படுகின்றன – அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை சந்தேகநபர்கள் இலங்கைக்கு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

உச்சகம் கொடுக்கும் சூரியன் – பகல்வேளையில் வெப்பப் எச்சரிக்கை மட்டத்தை எட்டும்

ஆவணி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube