Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு – விமானங்கள் மாற்று பாதைகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச வானூர்தி நிலையம் உட்படப் பல வானூர்தி நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்துள்ளனர்.

எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், வானூர்திகளின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் – இளைஞர்களால் உயிருடன் மீட்பு

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகர்வுக்கு தகாத 4,250 மெட்ரிக் டன் சர்க்கரை கையிருப்புடன் நால்வர் கைது!

ஆடி 7, 2026
இலங்கை

வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை: நீதிமன்றில் சட்டமா அதிபர் அறிவிப்பு!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது

ஆவணி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube