Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டுக்கு பொதுமக்கள் பங்கு அவசியம்

Dengue Dengue prevention Minister appeal Public participation Weekly cleaning 30–45 minutes Mosquito control Disease prevention Public health Environmental cleanliness

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் செயற்பாட்டு விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.

இந்தக் குழுக்கள் பெயரளவில் செயல்படாமல், நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து ஒழிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் என அவர் கூறினார்.

வீடுகள் மற்றும் அரச அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, நுளம்பு பெருகும் இடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கவுள்ளன. மேலும், உள்ளூராட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளன.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, நாடு முழுவதும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், சுமார் 25 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொதுமக்களும் நிறுவனங்களும் வாரத்திற்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை தங்களது சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்த ஒதுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

“நோயாளர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதை விட நோய் பரவலைத் தடுப்பதே இப்போதைய முக்கிய தேவையாகும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற விசேட குழுக்கள் ஏனைய மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மற்றும் சப்ரகமுவ பாடசாலை மாணவர்களுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஆனி 19, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் த.வெ.க தலைவர் கவனம் செலுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் – சாணக்கியன் இராசமாணிக்கம்

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube