Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2029 தேர்தலை வெற்றிகொள்ள அரசாங்கம் சர்வதிகார போக்கில் ஈடுபடுகிறது – உதய கம்மன்பில

புரட்டாதி 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்தினம், ஜனசெத பெரமுனவின் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் உள்ளிட்டோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பார்கள் என்றும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள் எனவும் அரசாங்கம் கூறி, எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சர்வதிகார போக்கில் ஈடுபட்டு வருவதாகப் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

சிறையில் உள்ள நாமல் ராஜபக்சவை நேற்று (07) திங்கட்கிழமை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் துஷ்டத்தனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தனக்கு அச்சுறுத்தலாக அமையாத குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு, தனக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏதேனும் ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

ஜனாதிபதியின் நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரையும் சிறைக்குள் அடைக்கும் வழிமுறைகள் குறித்தே விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டு வரை வேறு அரசாங்கங்கள் வராது என்றும் அவர்கள் கூறுகின்றனர். சிலர் கூறுவது போன்று பொது வாக்கெடுப்பு வரும் என்ற கதைகளை நாங்கள் கூறவில்லை. மாறாக, எதிர்க்கட்சியில் உள்ள சிலர் அரசாங்கம் மற்றவர்களைத்தான் உள்ளே போடுகிறது, நம்மை ஒன்றும் செய்யவில்லை என்று மௌனமாக இருந்துவிட்டு, தமக்கு எதிராக வராது என்று நினைக்கின்றனர்.

அவ்வாறான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜெர்மன் போதகரான மார்ட்டின் நியேமோலரிகன் நாஜிவாதிகள் குறித்துக் கூறிய கவிதையை நான் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அந்த கவிதையின் சுருக்கம் என்னவென்றால், ஏனையவர்களைக் கைது செய்து கொண்டு செல்லும்போது, ஏனையவர்களைக் கொல்லத் தேடி வரும்போது, அவர்கள் எனது அருகில் வரவில்லை என்பதால் நான் எதற்காகப் பேச வேண்டும் என்று மௌனமாக இருந்தனர்.

இறுதியில் அவர்கள் தன்னைத் தேடி வந்தபோது தனக்காகப் பேச யாருமே எஞ்சியிருக்கவில்லை என்பதாகும். இன்றும் கூட முனிவதியைக் கடைப்பிடித்து மௌனம் காப்பவர்களுக்கு எங்களால் கூற வேண்டியது அவ்வளவுதான் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 வருடங்களில் 265000 மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை நிறுத்தம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு, காணி உரிமை, வீடமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் கேள்வி

ஆவணி 4, 2026

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube