Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

ஆடி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று (23) வியாழக்கிழமை காலை பெரிய மரமொன்று வீதியில் முறிந்து விழுந்துள்ளது.

இன்றைய தினம் காலை 6:10 மணியளவில், பாடசாலைச் சிறுவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கமான காலை நேரப் பயணங்களில் ஈடுபட்டிருந்த நெரிசல் மிக்க வேளையிலேயே இம்மரம் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.

வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஹட்டன் பொலிஸார் ஆகியோர் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் கூட்டுச் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத் தீவிர போராட்டத்திற்குப் பின்னர் வீதியில் விழுந்த மரம் முழுமையாக அகற்றப்பட்டு, அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்து தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டது!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு அஞ்சுவது ஏன்?- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கேள்வி

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஐந்து தனியார் பேருந்துகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை பாடசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனை குழாய் வெடித்ததில் 4 மாணவிகள் காயம்!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube