Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

தல, தளபதி சந்திப்பினால் வேகமாக விற்பனையாகும் நுழைவுசீட்டு

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள ‘Goodyear 4 Hours of Silverstone’ சிற்றூந்து பந்தயத்தின் சனிக்கிழமைக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

எனவே, சனிக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுகளை ஏற்கனவே பெற்றிருக்காதவர்கள் பந்தயத் திடலுக்கு வர வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகள் இன்னும் கிடைக்கின்றன. எனினும், அவையும் வேகமாக விற்பனையாகி வருவதால், விரைவாக நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் குறித்த பந்தயத்தை தமிழக முதலமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளமையால், அதிகளவான ரசிகர்கள் சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அந்தப் பகுதிக்குச் செல்லும் வீதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பந்தயத் திடலுக்குச் செல்லும் ரசிகர்கள் தங்களது பயணத்திற்காக வழக்கத்தைவிட கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு, ஏற்பாட்டாளர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இளம் கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ் காலமானார்!

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாநகர சபையினால் அனுமதியளிக்கப்படாத கட்டிடமே இடிந்து விழுந்தது – கண்டி மேயர்

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி திலீபன் மரணத்தில் வெளிவந்த உண்மை!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube