பிரபல கனேடிய பாடகி செலின் டியோன்(Céline Dion), பாரிஸில் நடத்திய நீண்ட இடைவெளிக்குப் பின்னான மீள்வருகை நிகழ்ச்சியை இசை விமர்சகர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
உடல்நலப் பிரச்சினைகளால் நீண்ட காலமாக மேடை நிகழ்ச்சிகளில் இருந்து விலகியிருந்த செலின் டியோன், மீண்டும் நேரடி இசை நிகழ்ச்சியில் தோன்றியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“மிகுந்த சவால் நிறைந்த மீள்வருகை” என வர்ணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, அவரது குரல் திறமை மற்றும் மேடை ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
