Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேற்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

செப்டம்பர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் புகையிரத (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுப் புகையிரத சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை புகையிரத திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், சில புகையிரத சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், புகையிரத பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சூடான் ட்ரோன் தாக்குதல்: சந்தையில் 153 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2029 ஆம் ஆண்டு தேர்தலில் இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும் – திலித் ஜயவீர

ஆகஸ்ட் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

100 கிராமிய பாலங்களை புனரமைக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம்!

ஜூலை 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

டிரம்ப் வருகைக்கு முன், ஆயுதத்துடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் கைது!

ஆகஸ்ட் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube