Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 60 பேர் உயிரிழப்பு

#சூடான் #Sudan #தங்கச்சுரங்கவிபத்து #GoldMineAccident #MiningAccident #சுரங்கவிபத்து #60பேர்பலி #உயிரிழப்பு #SudanNews #WorldNews #BreakingNews #சோகசம்பவம் #GoldMine #LatestNews

புரட்டாதி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கோர்டோபன் மாகாணத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா தங்கச் சுரங்கமே நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து சக தொழிலாளர்கள் தங்களிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டுள்ளனர். எனினும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாறைகள் மற்றும் மண்ணை அகற்றுவதற்கு கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாக அங்கிருந்து தப்பிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீட்புப் பணிகள் சிரமமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

சுரங்கங்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருப்பதே இதுபோன்ற சுரங்க விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023ஆம் ஆண்டு முதல் சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ்வாதாரத்துக்காக பலர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையகத்தின் மூத்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று

ஆவணி 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தாயை இழந்த பன்றிக்குட்டிக்கு பாலூட்டிய பசு

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – மில்லியன் ரூபாய் அபராதம்

புரட்டாதி 24, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube